நாம் யார்

ஆசிரியர் மற்றும் நிறுவனர் அறிமுகம்

இந்த நிகழ்சியின் நிறுவனரும் ஆசிரியருமான திரு. ஜே. வெர்னான் மெக்கீ அவர்கள் வேறு எதைக்காட்டிலும் தேவனுடைய கதையைச் சொல்வதில் மிகவும் விருப்பமுடையவர். ஒரு போதகராகவும் வேதாகம ஆசிரியராகவும், 1941 ஆம் ஆண்டு வானொலியில் வேதாகமத்தைக் கற்பிக்கத் தொடங்கினார். இவரது எளிமையான பிரசங்களைக் கேட்டு, சான் கேப்ரியல் பள்ளத்தாக்கு மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியிலுள்ள மக்கள் தேவனுடைய வார்த்தையின் அதிசயங்களுக்குக் தங்கள் கவனத்தைத் திருப்புவார்கள் என்ற நம்பிக்கையுடன் பிரசங்கித்தார். டாக்டர் மெக்கீயின் நம்பிக்கை வீண் போகவில்லை, ஆச்சரியப்படத்தக்க விதத்தில் மக்களிடத்தில் பெரிய வரவேற்பு இருந்தது. வேதாகமம் ஒரு நல்ல கதைப்புத்தகம், மெக்கீயின் கதை சொல்லும் பாங்கும் வித்தியாசமாக இருந்ததால் மக்கள் ஈர்க்கப்பட்டார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக வேதாகமமே மக்களைத் தேவனிடத்திற்கு நேராகக் கொண்டுவரும் பிரதான வழியாகவும் இருக்கிறது.

வேத ஆராய்ச்சி விசேஷம் வரை வேதத்தை முறையாகப் படிப்பதற்கு இந்த கூhசர வாந க்ஷiடெந உதவுகிறது. வேதாகமத்திலுள்ள 66 புத்தகங்களும் ஒவ்வொரு புத்தகம் புத்தகமாக தெளிவாக வகையில் பின்னணியுடன் கற்பிக்கப்படுகிறது.சமானிய விசுவாசிகளும் புரிந்துகொள்ளும் வகையில் சிக்கலான பகுதிகளையும் எளிமையாக்கித் தருக்கிறது.

நீங்கள் வேதாகமத்தைப் இப்பொழுதுதான் படிக்கத் தொடங்கியவர்களாக இருந்தாலும் அல்லது பல்லாண்டுகளாக அதைப் படித்தவர்களாக இருந்தாலும் ஓர் அத்தியாயத்தை ஒரே நேரத்தல் ஆழமாகப் படிப்பதற்கு இந்த கூகூக்ஷ உங்களுக்கு வழிகாட்டுகிறது.
வவளெய.டிசப உடன் இன்றே உங்கள் பயணத்தைத் தொடங்குங்கள்.


Email Us : info@ttbsa.org